சாமக்ர சிக்ஷா அபியான் - மின்னணு கல்வியை மேம்படுத்த மத்தியஅரசு உறுதி.!
சாமக்ர சிக்ஷா அபியான் - மின்னணு கல்வியை மேம்படுத்த மத்தியஅரசு உறுதி.!
கோவிட் நோய் பரவாமல் தடுப்பதற்காக , குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாப்பதற்காக, பள்ளிகளும், இதர கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதை அடுத்து, நமது கல்விமுறை புதிய சவால்களைச் சந்தித்து வருகிறது.
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சாமக்ர சிக்ஷா அபியான் திட்டம் மழலையர் பள்ளி முதல் பிளஸ் 2 வரையிலான கல்வித் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது. தரமான கல்வியை அளிப்பது மட்டுமல்லாமல், டிஜிட்டல் வழியில் கல்வி கற்பிப்பதற்கு இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கல்வி முறையில் நிச்சயம் ஒரு புரட்சி ஏற்படும். பள்ளிகள் திறக்கப்படுவதற்குத் தடை நீடிக்கப்பட்டுள்ளதால் இன்னும் நீண்ட காலத்திற்கு தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி பெரும் பங்காற்றும். பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு வரும் காலங்களிலும், குழந்தைகளையும், இளைஞர்களையும் நோய் பாதித்து விடாமல் தடுப்பதற்காக பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அறிவூட்டுவதற்கான ஒரு மிக முக்கிய கருவியாக இணைய வழிக் கல்வி செயல்படுகிறது. இதனால் இணையதளம் சிறந்த பயன்பாட்டைப் பெறுகிறது.
சாமக்ர சிக்ஷா அபியான் திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான பள்ளித் திட்டம் கொண்ட ஒருங்கிணைந்த தொகுப்புக் கல்வியை அளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டிரிய மாத்தியமிக் சிக்ஷா அபியான், ஆசிரியர் கல்வி ஆகிய மூன்று திட்டங்களையும் உள்ளடக்கியது சமக்ரா சிக்ஷா அபியான். பல்வேறு கட்ட கல்வி நிலைகளுக்கும், மாணவர்களை எளிதில் சென்றடையும் வகையிலும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.