புதுச்சேரி; மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு!

புதுச்சேரி; மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு!

Update: 2020-07-23 11:52 GMT

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவு திரும்பப்பெற வேண்டும் என்று அரசு தீர்மானமாக மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்மொழிந்தார். கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


வெளிநடப்பு செய்தது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், மத்திய அரசு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மையமாக்கப்பாடும் என அறிவிப்பாக மட்டுமே வெளியிட்டிருக்கின்றது. இதுவரை சட்டமாக்கப்படவில்லை என்றும், இருப்பினும் பிற மாநிலங்களில் இதை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் மின் திருட்டை தடுக்கவே இது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாகவும் மேலும் பிற மாநிலங்களில் தனியார் மையமாக்கப்பட்டதை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்த பின்னர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

ஆனால் ஆராயாமல் எதிர்ப்பு தெரிவிப்பது தவறானது என்றும் தெரிவித்தார் மேலும் தனியார் மையமாக்கப்படுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Similar News