காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்ட படுகிறாரா சச்சின் பைலட்? - பா.ஜ.க. உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா சச்சின் பைலடுக்கு திடீர் ஆதரவு.!

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்ட படுகிறாரா சச்சின் பைலட்? - பா.ஜ.க. உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா சச்சின் பைலடுக்கு திடீர் ஆதரவு.!

Update: 2020-07-13 06:07 GMT

ராஜஸ்தானில் நடந்துவரும் அரசியல் குழப்பங்கள் இடையே அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஓரம் கட்டுப்படுவதாக பா.ஜ.க.வின் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். நடந்துவரும் ராஜஸ்தான் அரசியல் குழப்பங்கள் இடையே பா.ஜ.க. வின் உறுப்பினரான ஜோதிராதித்யா சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் பைலட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.



அவர் தனது கருத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினரால் சச்சின் பைலட் கட்சியிலிருந்து ஓரம் கட்டுப்படுவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் திறமை உள்ளவர்களுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பது வெளிக்காட்டுகிறது என அவர் கருத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இக்கருத்தை தெரிவித்துள்ள ஜோதிராதித்யா சிந்தியா சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க.விற்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் உடன் மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 25 பேர் உடன் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளிவருகிறது. இதனிடையே ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். மேலும் அவர் தனது எம்.எல்.ஏ. க்கள் அனைவரையும் தனக்கு சார்பாக கடிதம் எழுத கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2018 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட் சச்சின் பைலட் இடையே போட்டி நிகழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே சச்சின் பைலட் கட்சியிலிருந்து ஓரங்கட்ட படுவதாக சில செய்திகள் வெளிவந்தன.

நடந்து வரும் நிகழ்வுகள் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா கருத்தின் மூலம் சச்சின் பைலட் கட்சி மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைக் காணமுடிகிறது. மேலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

Similar News