நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் பரிசோதனை திறனை அதிகரிக்க புதிய மையம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கம்.!

நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் பரிசோதனை திறனை அதிகரிக்க புதிய மையம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கம்.!

Update: 2020-07-27 08:00 GMT

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங்களில் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ளவும் அதிநவீன பரிசோதனை மையங்கள் அமைக்கப்படவுள்ளது.

இன்று மாலை 4.30 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கொரோனா பரிசோதனை மையங்களை காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்கிறார். இந்த மையத்தினால் ஒரு நாளைக்கு பத்தாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மற்றும் 24 மணி நேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



இன்று விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மேற்கு வங்களம் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்த காணொளி காட்சியில் கலந்து கொள்கின்றனர்.

மேலும், இந்த மையத்தில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி, ஹெச்ஐவி உள்பட பரிசோதனைகளை செய்ய முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

Similar News