விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று சொன்னவர் தான் ஸ்டாலின் - ஓட்டுக்காக எந்த லெவலுக்கும் இறங்குவார்கள்!

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று சொன்னவர் தான் ஸ்டாலின் - ஓட்டுக்காக எந்த லெவலுக்கும் இறங்குவார்கள்!

Update: 2020-07-24 04:02 GMT

விநாயகர் சதுர்த்தி வாழ்த்தில் கூட உடன்பாடு இல்லை என்று சொன்னவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

இது குறித்து பேசிய அவர், கருப்பர் கூட்டம் யூடியூப் விவகாரத்தில் வெளிநாட்டில் இருக்கும் யூடியூப் சேனலின் தலைமையிடத்தில் தொடர்புகொண்டு அந்த இணையதளத்தில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்தது தமிழக அரசு.

இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றார்கள். அரசாங்கம் கண்டனம் தெரிவிக்க முடியாது. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான். இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என எந்த மதத்திற்கு பங்கம் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக நிற்கும் அரசு இது மதசார்பற்ற அரசு.

மேலும் அமைச்சர்கள் செங்கோட்டையன், சேவூர் ராமச்சந்திரன் உட்பட பலர் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இந்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து மதத்தின் பண்டிகைக்கும் வாழ்த்துக் கூறுவார். இந்து மதத்தின் எந்த ஒரு பண்டிகைைக்கும் வாழ்த்து கூற மாட்டார்.

அவரையும் மீறி திமுகவின் இணையதளத்தில் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து என்று வந்த செய்தியை மறுக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று சொன்னவர் தான் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து இந்துமதத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை திமுக எடுத்துக்கொண்டு வரும் குறிப்பாக ராமர் எந்த கல்லூரியில் படித்தார். இந்து என்றால் திருடன் என்று இந்து மதத்திற்கு எதிரான பல்வேறு கருத்துக்களை கூறுவதும் திமுக தான் என்று கூறியுள்ளார்.

Similar News