முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று பிறந்த நாள்; கிரிக்கெட் வாழ்க்கையின் சுவாரசிய தகவல்கள்.!

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று பிறந்த நாள்; கிரிக்கெட் வாழ்க்கையின் சுவாரசிய தகவல்கள்.!

Update: 2020-07-08 12:09 GMT

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் மற்றும் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலிக்கு இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்த நாளுக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 311 ஒருநாள் போட்டி மற்றும் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1990 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார்.

ஒருநாள் போட்டிகளில் 22 சதம் மற்றும் 72 அரைச் சதங்களுடன் 11,363 ரன்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்களுடன் 7,212 ரன்கள் அடித்துள்ளார். மேலும், பந்துவீச்சில் 100 ஒருநாள் போட்டிகளில் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சௌரவ் கங்குலி அனைவரும் செல்லமாக தாதா என அழைப்பார்கள்.


2000 ஆம் ஆண்டு பின்னர் கங்குலியின் தலைமையில் சிறந்த இந்திய அணி உருவாக்கப்பட்டது. இவருடைய தலைமையில் 146 ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது. அதில் 76 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.டெஸ்ட் போட்டிகளில் 49 போட்டிகளில் வென்றுள்ளது.

இதனிடையே முக்கியமாக இவர் கேப்டனாக இருந்தபோது யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், எம்.எஸ் டோனி ஆகிய வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்தார். இவர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சௌரவ் கங்குலி தலைமையில் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்குச் சென்றது. தற்போது சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக உள்ளார். ஆகவே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சௌரவ் கங்குலி (தாதா)...

Similar News