ஜாதி பெயரை கூறி கமெண்ட் பதிவிட்ட ரசிகர் - ஓப்பனாக பதிலடி கொடுத்த நடிகை ரித்விகா.!

ஜாதி பெயரை கூறி கமெண்ட் பதிவிட்ட ரசிகர் - ஓப்பனாக பதிலடி கொடுத்த நடிகை ரித்விகா.!

Update: 2020-07-21 10:09 GMT

மெட்ராஸ், கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரித்விகா. மேலும் பாலா இயக்கத்தில் வெளிவந்த "பரதேசி" படத்தின் மூலம் திரைக்கு பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளர் ஆனார்.

ரித்விகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்திற்கு ஒருவர் ஜாதி பெயரை குறிப்பிட்டு அவரை கமெண்ட் அடித்திருக்கிறார்.மேலும் அதனை பார்த்த நடிகை ரித்விகா, இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த நபர் ஜாதியை சுட்டிக்காட்டி, "பருவத்திலே பண்ணி கூட அழகாதான் இருக்கு SC கேர்ள்ஸ்" என கமெண்ட் செய்துள்ளார்.அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இதற்கு ரித்விகா, "சரிங்க மிஸ்டர். பாடு, சாரி மிஸ்டர்.மாடு" என ரிப்ளை செய்துள்ளார். இந்த உரையாடல் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் ரித்திவிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த கமெண்ட் போஸ்ட் செய்து அதில் தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன் என்று பல வாக்கியங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.அதனை பார்த்த நடிகை ரித்விகா, இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Similar News