மீரா மிதுன் சர்ச்சை ட்விட் : ரஜினி மற்றும் விஜய் குறித்து சர்ச்சையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.!

மீரா மிதுன் சர்ச்சை ட்விட் : ரஜினி மற்றும் விஜய் குறித்து சர்ச்சையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.!

Update: 2020-07-14 12:21 GMT

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இவர் வெளியில் வந்து பல குற்றச்சாட்டுகளையும் பலர் மேல் செலுத்தி வருகிறார்.சமீபத்தில் கூட த்ரிஷா குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய்,ரஜினி குறித்து சர்ச்சையான கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டில் தமிழ்நாடு தமிழர்களுக்கு உரியது என்றும் கிறிஸ்தவர்களும்,மலையாளிகளும் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றும் எனக்கு கோபம் வந்தால் மதுரையை கண்ணகி எரித்தது போல நானும் தமிழ்நாட்டையே எரித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.



இன்னொரு டுவிட்டில் ரஜினிகாந்த் கன்னடர் என்றும் விஜய் கிறிஸ்துவர் என்றும் இருவரும் என் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றார். இதுகுறித்து சைபர் கிரைமில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்று மீரா மிதுன் டுவிட்டரில் குற்றச்சாட்டுகள் எழுப்பி உள்ளார். இந்த டுவிட்டுக்களுக்கு

கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். ரஜினி, விஜய் ரசிகர்கள் இதைபார்த்து ஆவேசமாக திட்டி வருகின்றனர்.

Similar News