பா.ஜ.க பிரமுகர் உள்பட மூன்று பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - பரபரப்பில் காஷ்மீர்.!

பா.ஜ.க பிரமுகர் உள்பட மூன்று பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - பரபரப்பில் காஷ்மீர்.!

Update: 2020-07-09 06:25 GMT

காஷ்மீரில் உள்ள பந்திப்போரா மாவட்டத்தின் முன்னாள் பாஜக தலைவர் வசீம் பாரி. அந்தப் பகுதியில் பா.ஜ.கவின் முக்கிய பிரமுகர் ஆவார். இவளுடைய சகோதரர் உமர் சுல்தான் மற்றும் தந்தை பஷீர் அஹ்மத் ஆகியோர் அந்த பகுதியில் கடை வைத்துள்ளனர். நேற்று இவர்கள் மூன்று பேரும் அவர்களுடைய கடையில் இருந்தபோது திடீரென்று வந்த மர்ம நபர்கள் மூன்று மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர்கள் மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

பின்னர் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தை நடத்தி இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பே வசீம் பாரிக்கு பல மிரட்டல்கள் இருந்ததால் அவருக்கு பத்து தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புக்காக இருந்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பாதுகாப்பு வீரர்கள் வசீம் பாரியின் கடைக்கு அருகில் உள்ள அவருடைய வீட்டில் இருந்துள்ளனர். இவர்கள் இல்லாத சமயத்தில் இந்த பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளனர். இதனிடையே கடமையைச் செய்யத் தவறியதால் அந்த பத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் தற்போது கைது செய்துள்ளனர்

காஷ்மீரில் இந்த சம்பவத்துக்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தைப் பற்றி பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்து உள்ளார். பின்னர் பாரியின் குடும்பத்துக்கு அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமானது. பாஜக கட்சிக்கு இவருடைய இழப்பு பெரியது. அவருடைய தியாகம் வீண் போகாது உறுதி அளிக்கிறேன் என பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாடு விட்டரில் பதிவிட்டுள்ளார்.   



Similar News