ஒடுக்கு முறையால் மதம் மாறினார்களா அல்லது சூழ்ச்சியின் காரணமாக மதம் மாற்ற பட்டர்களா ? - ஒரு வரலாற்று பார்வை.

ஒடுக்கு முறையால் மதம் மாறினார்களா அல்லது சூழ்ச்சியின் காரணமாக மதம் மாற்ற பட்டர்களா ? - ஒரு வரலாற்று பார்வை.

Update: 2020-07-21 05:45 GMT

ஒடுக்கு முறையால் தான் கிருஸ்த்துவத்துக்கு மதம் மாறினார்கள் என்ற பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.சரி தென்னக பரதவர்கள் யாருடைய ஒடுக்கு முறையால்,எதன் பொருட்டு மதம் மாறினார்கள் என்பதை வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள்.

சோழ,பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பின்னால் தென் கடற்கரை முழுவதுமாக இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது.பழைய காயலை தலைநகர் போல இஸ்லாமியர்கள் வைத்துக் கொண்டு செயல்பட்டனர்.பரதவர்களுடனும்,முக்குவர்களுடனும் நடந்த இனக்கலப்புகளில் புதிய பிரிவுகள் உருவாகின.முத்துக்குளிக்கும் அதிகாரத்தையும் இஸ்லாமியர்களே கைப்பற்றினர்.வெறும் வரி வசூலிப்பு செய்யும் குறுநில மன்னர்களாக ஆகிப்போன இந்து மன்னர்களால் இஸ்லாமியர்களை எதிர்த்துக் கொண்டு பரதவர்களுக்கு உதவ முடியவில்லை.

தங்கள் வழி வழி உரிமையை அதிகாரத்தை ஒரு சுதந்திர குடி என்றும் விட்டுக் கொடுக்காது.இஸ்லாமியர்களுக்கும்,

தென் பரதவர்களுக்கும் மூர்க்கமான சண்டைகள் நடந்தன.இந்த சூழ்நிலையில் ஜெசூட் மதவெறி பாதிரிகள் தங்கள் செயல்திட்டத்தை துவங்கினர். ஜான் டி குரூஸ் என்பவர் பரதவர் சாதி தலைவர்களாக இருந்த பட்டங்கட்டிகளை கொச்சிக்கு அழைத்து சென்று போர்த்துக்கீசியரின் படை உதவியை தருவதாக சொல்லி எழுபது பேரும் மதம் மாற்றப்பட்டனர்.

1536-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் போர்த்துக்கீசிய தளபதியான பேதுருவாஸ் தலைமையில் பெரும் கப்பற்படை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு வேதாளை என்ற இடத்தில் அராபிய மூர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் போர் நடந்தது. காயல்பட்டினம் இஸ்லாமிய மன்னன் கொல்லப்பட்டு போர்த்துக்கீசியர் காயல்பட்டினத்தை கைப்பற்றினார்கள்.அன்றிலிருந்து கடல் வணிகம் கிருஸ்த்துவர்களுக்கு கீழே வந்தது தமிழக கடற்கரைகளில்.

அதன் பிறகு பாதிரி மைக்கேல் வாஸரின் முன்னிலையில் தூத்துக்குடி, பழையகாயல்,புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டினம்,ஆலந்தலை, மணப்பாடு, திருசெந்தூர்,உள்ளிட்ட ஏழு கடற்துறையச் சார்ந்த முப்பதாயிரம் மக்கள் கூட்டமாக ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவினார்கள்.பின்னால் புனித சேவியரால் கடற்கரை ஓரங்களில் பணியாற்றி தமிழகத்துக்கு தகுந்த முறையில் மீனவர்களின் விருப்பமறிந்து மத முறைகளில் தளர்வுகள் செய்து சீர்படுத்தப்பட்டது.

எனவே இஸ்லாமியர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக உதவி கேட்டவர்களை மதம்மாற்றி அந்த மக்களின் நன்றி உணர்வையும்,விஸ்வாசத்தையும் தங்கள் மதவெறிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்ததுதான் கிருஸ்த்தவம்.

இன்றும் பரதவர்களின் சுதந்திரக்குடி.அவர்கள் உலகின் மிகமூத்த பாரம்பரியம் கொண்ட குலம்,தமிழகத்தில் திணைகுடியாக வைத்து போற்றப்பட்டவர்கள்.ஏதோ அசம்பாவித வீழ்ச்சியாலும் ஆபிரஹாமியா மதங்களின் கொடுமைகளாலும் மதம் மாறி தங்கள் சுதந்திரத்தை காக்க நினைத்தவர்கள் அறுத்தெறிய முடியாத வலையில் சிக்கிவிட்டார்கள்.

இந்தியா முழுக்க எப்படி பரதவ குடிகளை இந்து இயக்கங்கள் அரவணைத்துக் கொண்டு போகிறதோ அதே போல தமிழ்நாட்டிலும் கொண்டு செல்ல வேண்டும்.இன்றும் கடற்கரையின் காவல் வீரர்கள்.அவர்களாலே நமது கரை பலமாக இருக்கிறது.சென்னை முதல் ஜெகதாப்பட்டினம் வரை ஓரளவு வலிமையாக இந்து மீனவர்கள் இருக்கிறார்கள்.தங்களை அதிபக்த நாயன்மார் வம்சமாக உணர்கிறார்கள்.

தங்களின் துன்பங்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று எங்கே கிருஸ்த்துவ சபைகளை நோக்கி திரும்பிவிடுவார்களோ? தாய் மதம் திரும்பிவிடுவார்களோ? என்ற அச்சத்தில்தான் மோடி வெறுப்பின் மூலம் இந்து மத வெறுப்பை அவர்கள் மத்தியில் தென் தமிழகத்தில் ஊட்டுகிறார்கள்.

அதில் மீண்டும் இந்து மதம் திரும்பிய மக்களும் உள்ளார்கள்.அவர்களைப் பற்றி "அலைவாய்க்கரையில்" என்ற நாவலை எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.மரியான் எப்படி சுப்ரமணியனாக மீண்டும் ஆகிறான் என்பதன் உள்முரண்கள்,மதம் கைவிடுகிற இடத்தை நன்றாகவே பேசியிருக்கிறார் அதில்.அதே போல ஜோடி குருஸ்ஸின்'ஆழி சூழ் உலகு' ஒரு பொக்கிஷம்.

Similar News