கோவை மாவட்டத்தின் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் கொரோனாவால் பாதிப்பு.!

கோவை மாவட்டத்தின் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-05 05:55 GMT

கோயம்புத்தூர் மாவட்டத்தின் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக அம்மன் அர்ஜுனன் இருந்து வருகிறார். இவர் செல்வபுரம் அருகிலுள்ள திருநகர் என்கிற பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகள் குடும்பத்தினரோடு மதுரைக்கு சென்று வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருடைய வீட்டில் இருக்கும் ஒன்பது பேருக்கும் சென்ற மாதம் 29 ஆம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் எம்எல்ஏவின் மகள், அவருடைய மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் பின்னர் அவர்கள் மூன்று பேரையும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் மற்றும் மற்றவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

Similar News