கொரோனா நெருக்கடியை சமாளிக்க எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் - பிரிட்டனை சேர்ந்த பெருங் கோடீஸ்வரர்கள் அரசுக்கு கடிதம்.!

கொரோனா நெருக்கடியை சமாளிக்க எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் - பிரிட்டனை சேர்ந்த பெருங் கோடீஸ்வரர்கள் அரசுக்கு கடிதம்.!

Update: 2020-07-14 07:53 GMT

கொரோனாவின் தாக்கத்தை சமாளிக்க அதிக அளவில் நிதி தேவைப்படுவதால், தங்களைப் போன்றவர்களுக்கு அதிக வரி விதிக்குமாறு ம், அதன் மூலம் நெருக்கடியை சமாளிக்குமாரும் பிரிட்டனை சேர்ந்த பெருங் கோடீஸ்வரர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அபிகெய்ல் டிஸ்னி, டிம் டிஸ்னி, மேரி போர்டு உள்ளிட்ட 83 பெருங்கோடீஸ்வரர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் , நோயாளிகளை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது,வீடு வீடாகச் சென்று உணவு வழங்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட எங்களால் இயலாத சூழ்நிலை உள்ளோம். ஆனால் ஏராளமானோர் மனித அன்பின் பேரில் ரிஸ்க் எடுத்து அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாகவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் நாங்களும் நிம்மதி இல்லாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கடமைபட்டுள்ளதாக கூறிய அவர்கள் அரசுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சமாளிக்க தங்களுக்கு அதிக வரியை விதியுங்கள் எனவும் கூறியுள்ளனர். இக்கடிதம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Similar News