இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்மிரிதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று - அவருடைய கிரிக்கெட் வாழ்கை ஒரு பார்வை.!

இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்மிரிதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று - அவருடைய கிரிக்கெட் வாழ்கை ஒரு பார்வை.!

Update: 2020-07-18 12:19 GMT

இந்திய பெண்கள் அணியின் துவக்க வீராங்கனை மற்றும் அதிரடி வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனாவின் பிறந்த நாள் இன்று. இவர் களத்தில் இறங்கிய உடனே பவுலர் வீச்சும் பந்தை பவுண்டரிக்கு பறக்க விடுவார்.

24 வயதான ஸ்மிரிதி மந்தனா மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய குடும்பத்தில் அப்பா ஸ்ரீனிவாஸ் மற்றும் அண்ணன் ஷ்ரவண் இருவரும் கிரிக்கெட் வீரர்கள். இதனை பார்த்த வளர்ந்த ஸ்மிரிதி மந்தனா கிரிக்கெட் மீது பெரிய ஆர்வம் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள கிரிக்கெட் அகடமியில் பயிற்சி கொள்ளாமல்தெருக்களில் விளையாடி பயிற்சிகளை மேற்கொண்டார். இவருடைய 9 வயதில் மகாராஷ்டிரா அண்டர் 15 அணிக்காகவும், 11 வயதில் அண்டர் 19 அணிக்காகவும் விளையாடி உள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்த ஸ்மிரிதி மந்தனாவிற்கு பதினோரு வயதில் 2013ஆம் ஆண்டு இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தது அந்த ஒரு போட்டி தான் உள்ளூர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 150 பந்துகளில் 224 ரன்களை அடித்துள்ளார்.


அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ், இங்கிலாந்தில் இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் சூப்பர் லீக் டி20 தொடர்களில் விளையாடி சர்வதேச கிரிக்கெட் களத்தில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஸ்மிரிதி சதம் அடித்து இந்திய அணியில் அவரை தக்க வைத்து கொண்டார். பின்னர் காயமடைந்த அவர் 2017 ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு நுழைந்தார். 9 போட்டிகளில் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றார்.

இதன் பிறகு 2018ஆம் ஆண்டு 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 669 ரன்கள் குவித்தார். அந்த ஆண்டு ஐ.சி.சி 'ரஷேல் ஹெயோஹே - பிளிண்ட்' விருதை ஐசிசி ஹா ஹா ஹா ஓஹோஹோ கிளியண்ட் விருதை ஸ்மிரிதி மந்தனாவுக்கு கொடுத்து கௌரவித்தனர். 2019ஆம் ஆண்டு அவருடைய வேட்டை துவங்கியது. இந்திய அணிக்காக 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,025 ரன்களை எடுத்தார். அவருடைய பேட்டிங் சராசரி 43.08 . நான்கு சதம் 17 அரை சதம் விளாசியுள்ளார்.

பெண்கள் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் டாப் பேட்ஸ்வுமன்களில் நான்காவது இடத்தில் ஸ்மிரிதி உள்ளார். டி20 போட்டிகளில் ஸ்மிரிதின் ஸ்ட்ரைக் ரேட் 117. அதிவேக அரை சதம் அடித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் டி20 உலக கோப்பையில் பெருமளவில் விளையாடவில்லை என்றாலும் துவக்கத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். மேலும்,இன்னும் பல சாதனைகளை அவர் பெற வேண்டும் என வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்மிரிதி மந்தனா.

Similar News