"பயம் என்கின்ற பலவீனமா?"- தி.மு.க டெல்லியில் மடிப்பிச்சை கேட்ட வரலாறு ஸ்டாலினுக்கு தெரியாதா? முரசொலி தலையங்கத்திற்கு முடிவுரை எழுதிய ஆசீர்வாதம் ஆச்சாரி!
"பயம் என்கின்ற பலவீனமா?"- தி.மு.க டெல்லியில் மடிப்பிச்சை கேட்ட வரலாறு ஸ்டாலினுக்கு தெரியாதா? முரசொலி தலையங்கத்திற்கு முடிவுரை எழுதிய ஆசீர்வாதம் ஆச்சாரி!
இன்று (13.7.2020) வெளிவந்த 'முரசொலி' நாளிதழில் "தி.மு.க.வை வீழ்த்த உத்திகளை வகுக்கிறார்களாம்" என்கிற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
"பயம் என்கின்ற பலவீனமா?" - முரசொலிக்கு எனது கேள்வி.
13.7.௨௦௨௦-ல் (இன்று) வெளிவந்த 'முரசொலி' நாளிதழில் "தி.மு.க.வை வீழ்த்த உத்திகளை வகுக்கிறார்களாம்" என்கிற தலைப்பில் எழுதப்பட்ட நீண்ட தலையங்கம் என்னை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. முரசொலி நாளிதழ் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் என்ற வகையில், இந்தத் தலையங்கம் தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்றபின்பு தான் பிரசுரிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.
வழக்கம்போல, முரசொலி பாணியில் "ஆச்சாரியர்கள்" என்றிருக்கிறார்கள். "நூலோர்கள்" என்றிருக்கிறார்கள். "டெல்லி எஜமானர்கள்" என்றும் வழக்கம்போலவே அழைத்திருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு எதிராக "லேகியம்" தயாரிப்பதாகவும், அதை வைத்து அ.இ.அ.தி.மு.க.வைப் பலப்படுத்த சிலர் நினைப்பதாகவும், தி.மு.க. ஒரு சுதேசி இயக்கம் என்றும் எரிச்சலை கொட்டியிருக்கிறார்கள். ஆம், ஆச்சாரியர்கள் என்றாலே தி.மு.க.வினருக்கு அச்சம் தான். எனது பேரை நேரடியாக குறிப்பிடக் கூட "பயம்" என்று பார்க்கையில், உங்களது இந்த "பயம்" எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது.
பெங்களூரு சிறையில் இருக்கும் ஒருவர் சட்டரீதியாகவே விடுதலை பெற்று வருவதையும், அதை பற்றி வலைத்தள பதிவுகளோ, ஊடக விவாதங்களோ வருவதையும் சிறிதும் விரும்பாத மனப் பதற்றத்தை தலையங்கத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
தி.மு.க.வை எதிர்ப்பதற்கு ஒரு 'நோஞ்சானை' பயில்வானாக்கவும் முயற்சி நடப்பதாகவும் உவமையோடு சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஏன் இந்தப் பதற்றம்? எதனால் இந்த அளவுக்குப் பிதற்றல்?