துணிச்சலாக சாட்சி சொன்ன பெண் காவலரை பாராட்டிய நடிகர்கள்.!

துணிச்சலாக சாட்சி சொன்ன பெண் காவலரை பாராட்டிய நடிகர்கள்.!

Update: 2020-07-02 04:04 GMT

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விடிய விடிய அடித்து துன்புறுத்தியதாக சாட்சியமளித்த பெண் காவலர் ரேவதியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு #-tag யை உருவாக்கியுள்ளனர்.

நடிகர் கமலஹாசன், ஜிவி பிரகாஷ் நடிகை ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், டைரக்டர் வெற்றிமாறன் ஆகியோர் இந்த தேசம் உங்கள் பின்னால் இருக்கிறது என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீதியை நிலைநாட்ட போராடிக்கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு, அவருக்கு உறுதுணையாக இருக்கும் மதுரை உயர் நீதிமன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலரே நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என பாராட்டி வருகின்றனர்.

Similar News