ஊரடங்கால் பொழுதுபோக்கிற்காக பேக்கிங் கம்பெனி ஆரம்பித்த வரலட்சுமி!
ஊரடங்கால் பொழுதுபோக்கிற்காக பேக்கிங் கம்பெனி ஆரம்பித்த வரலட்சுமி!
வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கியதுவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் பல ஹீரோ-ஹீரோயின்கள் தனது பொழுதுபோக்கிற்காக யோகா, சமையல், போட்டோஷூட் போன்றவை செய்து பொழுதை கழித்து வருகின்றனர்.
ஆனால் வரலட்சுமி பொழுதுபோக்கிற்காக தான் செய்யும் விஷயத்தை காசாக மாற்றியுள்ளார்.
கடந்த மாதம் புதியதாக LIFE OF PIE என்ற பெயரில் ஒரு பேக்கிங் கம்பெனி ஆரம்பித்துள்ளார். வெளிநாட்டில் தான் சாப்பிட்ட ஹொக்கைடோ சீஸ் டார்ட்ஸ் தான் இன்ஸபிரேஷனாம். நம் ஊர் பொருட்களை வைத்து எளிமையாக செய்து விக்கிறார்.
இதுவரை 100 நபர்களுக்கு மேல் டெலிவரி செய்துள்ளாராம்.