புதுச்சேரி : பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் - சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

புதுச்சேரி : பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் - சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

Update: 2020-07-15 04:06 GMT

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தாக்கினார் மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சட்டப்பேரவையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் பட்டியலை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் ஒப்படைத்தார்.

இதனிடையே கட்சிக்கும், ஆட்சிக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் தனவேலு செயல்படுவதாகவும் எனவே சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அரசு கொறடா அனந்தராமன், சபாநாயகர் சிவகொழுந்துவை சந்தித்து மனு அளித்து இருந்தார். இந்நிலையில் கட்சிக்குஎதிராக செயல்பட்டதாக கடந்த 10-ந்தேதி சபாநாயகர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மேலும், கொரோனா காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் பழி வாங்கும் செயல் எனவும் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றமத்தில் தனவேலு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பாகூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டசபை சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

Similar News