சீர்திருத்தம் என்பது நாட்டின் நலனுக்கும் மக்களின் நல்வாழ்வுக்குமான ஒரு தீர்மானம் - முக்தார் அப்பாஸ் நக்வி .!
சீர்திருத்தம் என்பது நாட்டின் நலனுக்கும் மக்களின் நல்வாழ்வுக்குமான ஒரு தீர்மானம் - முக்தார் அப்பாஸ் நக்வி .!
"சீர்திருத்தம் என்பது ஒழுங்குமுறைபடுத்துதல் மட்டும் அல்ல", சீர்திருத்தம் என்பது நாட்டின் நலனுக்கும் மக்களின் நல்வாழ்வுக்குமான ஒரு தீர்மானமும்" ஆகும் என்று மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று புதுதில்லியில் தெரிவித்தார்.
தில்லிப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வியில் தொழில் நிபுணத்துவ மேம்பாட்டுக்கான மையம் நடத்திய "தேசியக் கட்டுமானம் மற்றும் தலைமுறை உருவாக்கலில் இதழியல், ஊடகம் மற்றும் திரைப்படத்தின் பங்கு என்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது, அரசு, அரசியல், திரைப்படம் மற்றும் ஊடகம் ஆகியன ஒன்றுடன் ஒன்று உறவுள்ளவை என்று திரு. நக்வி தெரிவித்தார். சமூகம் மற்றும் தைரியம், பொறுப்புடைமை மற்றும் எச்சரிக்கை ஆகிய நுட்பமான இழைகளால் பின்னப்பட்டிருக்கும் இவை பரிசீலிக்கப்பட்டும் மதிப்பீடு செய்யப்பட்டும் உள்ளன. இந்த உறவுகளை வலுப்படுத்துவதற்கு இவை முக்கியமான உந்து சக்தியாக உள்ளன.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசு, சமுதாயம், திரைப்படம் மற்றும் ஊடகம் ஆகியவை "நான்கு உடல்கள், ஆனால் ஒரே இதயம்" என்று செயல்படுவதாக திரு நக்வி குறிப்பிட்டார். சுதந்திரத்திற்கு முன்பும் அல்லது அதற்குப் பின்பும் நாட்டில் ஒரு நெருக்கடி ஏற்பட்டால் இந்த நான்கு பிரிவுகளும் ஒன்றாக இணைந்து நாட்டு நலன் மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் முழுமையான நேர்மையோடு அந்தந்தப் பிரிவும் தங்களது பொறுப்புகளைச் செயல்படுத்தும் என்பதை வரலாறு வெளிப்படுத்துகிறது என்று திரு நக்வி மேலும் தெரிவித்தார்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் என்ற வடிவில் அத்தகைய ஒரு நெருக்கடியை ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொண்டு வருவதாக திரு நக்வி கூறினார். "பல தலைமுறைகளும் இத்தகைய ஒரு சவாலை இதற்கு முன்பு சந்தித்தது இல்லை. சமுதாயம், அரசு, திரைப்படம் மற்றும் ஊடகம் ஆகியவை தங்களது பங்கினை ஆற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இந்த நான்கு பிரிவுகளும் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு அங்கமாக உருவாகியுள்ளன" என்று அவர் மேலும் தெரிவித்தார்.