மதராசபட்டினம் படத்தில் நடிக்க இருந்த நடிகை இவர்தானாம்!!!

மதராசபட்டினம் படத்தில் நடிக்க இருந்த நடிகை இவர்தானாம்!!!

Update: 2020-07-09 12:08 GMT

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்தது இப்படத்தில் ஆர்யா ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதராசப்பட்டினம் படத்தில் தமிழ் நடிகர்கள் மட்டுமில்லாமல் லண்டனைச் சேர்ந்த பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர் இந்தப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் விஜய்:

நான் கதாநாயகிக்காக லண்டனில் ஆடிஷன் செய்துகொண்டு இருந்தேன். கதாநாயகியாக நடிக்க பல பெண்களை தேர்வு செய்து வந்தேன். அப்போது நடிகை வனேசா ஹட்ஜென்ஸின் ஏஜென்ட்களை தொடர்பு கொள்ள முயன்றதாக கூறியுள்ளார். அதன் பிறகு *மிஸ் டீன் வேர்ல்ட்* 2009 அழகிப்பட்டத்தை வென்றதாக இணையத்தில் எமியின் ஒரு படத்தை மட்டுமே நான் பார்த்தேன் என்றார்.

என் ஏஜென்ட் ஏமி ஜாக்சனுடன் கடைசி நாள் வரை தொடர்பு கொள்ள முடியவில்லை.பின்னர் எமி ஜாக்ஸன் ஆடிஷனின் கடைசி நாளில் வந்தார். பின்னர் க்யூவில் சிலர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். ஏமி ஜாக்சன் நின்று கொண்டிருப்பதை கவனித்து நான் அவரை அழைத்து வந்து என்னுடைய டீமுடன் அறிமுகப்படுத்தினேன். இவர்தான் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்றேன்.

Similar News