புதுச்சேரி : பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பு - மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.!

புதுச்சேரி : பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பு - மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.!

Update: 2020-07-13 04:07 GMT

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 661 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 739 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,418 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர், நடைபயிற்ச்சி மேற்கோள்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் கொரோனா தொற்று மாநிலத்தில் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கோரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்

Similar News