நீர் ஆதார இயக்கம்: தினமும் ஒரு லட்சம் குழாய் இணைப்புகள் வழங்கப்படுகின்றன - மத்திய அரசு .!
நீர் ஆதார இயக்கம்: தினமும் ஒரு லட்சம் குழாய் இணைப்புகள் வழங்கப்படுகின்றன - மத்திய அரசு .!
நீர் ஆதார இயக்கம் 2019 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது, 2019-20 ஆம் ஆண்டின் 7 மாதங்களில் சுமார் 84.83 லட்சம் கிராமப்புற குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
. மேலும் கோவிட்-19 வைரஸ் தொற்றுகளுக்கு மத்தியில், முதல் ஊரடங்கு முடிவுற்றதும், 2020-21ல் இதுவரை சுமார் 45 லட்சம் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே தினமும் சுமார் 1 லட்சம் குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கி அதன் வேகத்தை வெளிப்படுத்துகிறது..
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சொத்தும் புவி-குறியிடப்பட்டு, இணைப்புகள் குடும்ப தலைவரின் 'ஆதார்' எண்ணுடன் இணைக்கப்படுகின்றன
நீர் ஆதார இயக்கத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், மாவட்ட அளவில் விளக்கப் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சகத்தின் வலைதளத்தில் காணலாம்.
இந்த இயக்கம் நடைமுறைக்கு வந்தபின், அடிப்படை தரவுகளின் மறு மதிப்பீடு பயிற்சியை புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன; அதன்படி நாட்டில் 19.04 கோடி கிராமப்புற குடியிருப்புகள் உள்ளன, அவற்றில் 3.23 கோடி குடியிருப்புகளுக்கு ஏற்கனவே குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15.81 கோடி குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. எனவே, இதன் நோக்கம் என்னவெனில், சுமார் 16 கோடி குடியிருப்புகளுக்கு காலவரைக்கு உட்பட்ட தினத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணைப்புகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் 3.2 கோடி குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதே இதன் பொருள். அதாவது தினசரி அடிப்படையில், தோராயமாக. 88,000 குழாய் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இந்த இலக்கை மனதில் கொண்டு, ஒவ்வொரு கிராமப்புற குடியிருப்புக்கும் குழாய் இணைப்பை வழங்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கடுமையாகப் பணியாற்றி வருகின்றன. இந்த முயற்சியில், பிகார், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சிறந்த செயல்திறனுடன் முன்னிலை வகிக்கின்றன .