காஷ்மீர் - நேபாளம் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை.!
காஷ்மீர் - நேபாளம் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை.!;
ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் 370 பிரிவு சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற்று ஒரு ஆண்டு முடிவடைகிறது. அந்த தினத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது.
இதற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதன் பின்பு டெல்லி, உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கும் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சி மேற்கொண்ட பயங்கரவாதிகள் காஷ்மீர் - நேபாளம் வழியே ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றுவர். இதனால் இந்தியா கேட், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை உட்பட பல முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.