பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

Update: 2020-07-12 05:54 GMT

நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் மற்றும் அவருடைய மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சன் அவருக்கு கொரோனா இருப்பதை அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதில் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் என்னுடைய பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய பரிசோதனை முடிவுகளுக்காக காத்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.



இதன் பிறகு அவருடைய மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.



இந்தத் தகவலை அறிந்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அமிதாப் பச்சனையும் மற்றும் அபிஷேக் பச்சனையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். பிறகு அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகளைப் பற்றி கேட்டறிந்துள்ளார்

மேலும், நடிகர்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என அனைவரும் இவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என கடவுளிடம் பிராத்தனை செய்து வருகின்றனர். 

Similar News