பிரபுதேவாவிற்கு வேண்டுகோள் விடுத்த ராபர்ட் மாஸ்டர்.!

பிரபுதேவாவிற்கு வேண்டுகோள் விடுத்த ராபர்ட் மாஸ்டர்.!

Update: 2020-07-08 07:44 GMT

2018 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த மாரி 2 படத்தில் ரவுடி பேபி என்ற பாட்டுக்கு பிரபுதேவா நடனம் அமைத்தார். இந்தப் பாடல் மற்றும் நடன காட்சிகள் பார்ப்போரை எல்லாம் கவர்ந்து வந்தது.

இந்த பாடல் பிரபுதேவாவின் முன்னிலையில் ஆந்திராவை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் ஜானி நடன அமைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்காக சிறந்த நடன அமைப்பாளருக்கான விருது பிரபுதேவாவிற்கு வழங்கப்பட்டது. இது குறித்து அவர் பேசியபோது இந்த விருதிற்கு சொந்தமானவர் ஜானி என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமீபத்தில் வெளிவந்தது இந்த வீடியோவை பார்த்த ராபர்ட் ஆவேசமடைந்து உங்களை கீழ் பலபேர் உதவி நடன இயக்குனர்களாக பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் திறமையானவர்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ளார். என்று வேண்டுகோள் விடுத்தார்.

Similar News