புதுச்சேரி : தன்னிடம் ஒப்புதல் பெறாமல் பட்ஜெட் தாக்கல் செய்ததாக மத்திய உள்துறை செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம்.!

புதுச்சேரி : தன்னிடம் ஒப்புதல் பெறாமல் பட்ஜெட் தாக்கல் செய்ததாக மத்திய உள்துறை செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம்.!

Update: 2020-07-21 04:13 GMT

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிடம் ஒப்புதல் பெறாமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார் ஆனால் அதையும் மீறி பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார் இதனையடுத்து துணைநிலை ஆளுநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்

சட்ட விதிகள் படி, முதல்வரிடம் இருக்கும் பட்ஜெட்கோப்புகள் என்னிடம் அனுப்பப்படவில்லை. நமது சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை ஆகஸ்ட் முதல் பாதிக்கப்படும். இந்த குற்றம் துணைநிலை ஆளுநர் மீதோ, இந்திய அரசு மீதோ சுமத்தப்படக்கூடாது.


ஆளுநர் தாமதப்படுத்தியதாக முதல்வரோ, அமைச்சரோ குற்றம்சாட்டினால் அது தவறானது. சட்டம், விதிகள் கீழ் குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்ட பட்ஜெட் கோப்பை அனுப்பவில்லை.


நான் விதிகள், சட்டத்தை எழுதவில்லை. அதே நேரத்தில் யூனியன் பிரதேச சட்ட விதிகளை நாங்கள் அறிந்துள்ளோம். தாமதம் ஆளுநரிடம் இல்லை. உண்மையற்ற குற்றச்சாட்டுகளை மக்களிடம் யாரும் பரப்பக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்னும் தமக்கு நிதிநிலை அறிக்கை குறித்து கோப்பு அனுப்பாமல், சட்டபேரவையில் அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் என நாளிதழ் மூலமாக தாம் தெரிந்து கொண்டதாகவும், மேலும் முதல்வர் நாராயணசாமி அனுப்பிய கடிதத்தையும் அனுப்பி உள்ளதாக மத்திய உள்துறை செயலர் அஜெய் குமார் பஹாலா விற்கு ஆளுநர் கிரண் பேடி கடிதம் உள்ளதாகவும் தெரிவித்தார். 

Similar News