ஐசிசி முழு தரவரிசை பட்டியல் : விராட் கோலி-ரோகித் சர்மா பேட்டிங் பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்தனர்.!
ஐசிசி முழு தரவரிசை பட்டியல் : விராட் கோலி-ரோகித் சர்மா பேட்டிங் பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்தனர்.!;
ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியயை இன்று வெளியிட்டது. அதில் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் பின்னர் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம், நான்காவது இடத்தில் நியூசிலாந்து வீரர் ராஸ் டைலர், ஐந்தாவது இடத்தில் தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் இருக்கின்றனர்.
பந்தை வீச்சு தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட், மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானும் , நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் மற்றும் ஐந்தாவது இடத்தில் தென்னாபிரிக்கா வீரர் ராபடவும் இருக்கின்றனர்.
ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்திலும், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் இமாத் வசிம் மூன்றாவது இடத்திலும், உள்ளனர். இதில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா எட்டாவது இடத்தில் உள்ளார்.