கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த கா்னல் மனைவிக்கு "துணை ஆட்சியர்" பதவி - தெலுங்கானா அரசு கௌரவம்.!

கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த கா்னல் மனைவிக்கு "துணை ஆட்சியர்" பதவி - தெலுங்கானா அரசு கௌரவம்.!

Update: 2020-07-24 03:23 GMT

ஹைதராபாத்: கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களில் ஒருவரான கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷி துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சர் அலுவலகம், கர்னலின் மனைவியை நேரில் அழைத்து முதலமைச்சர், கே.சந்திரசேகர் ராவ் சந்தோஷிக்கு துணை ஆட்சியர்க்கான நியமனம் கடிதத்தை பிரகதி பவனில் கடந்த புதன்கிழமை வழங்கினார்.மேலும் ஹைதராபாத் மாவட்டத்தில் அருகே பஞ்சாரா ஹில்ஸ் 20 கோடி மதிப்புள்ள வீட்டு மனை பட்டாவை சந்தோஷி குடும்பத்திற்கு அவர் வழங்கினார்.

மேலும் இந்தத் துணை ஆட்சியாளர் வேலையை ஹைதராபாத் சுற்றுவட்டாரத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் அமைத்து தருமாறு வழங்க அவர் ஆணை பிறப்பித்துள்ளார் மற்றும் முதல்வர் தனது செயலாளர் ஸ்மிதா சபர்வாலை சந்தோஷிக்கு முறையான பயிற்சி பெற்று தனது வேலையில் குடியேறும் வரை அவருக்கு உதவியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் முதலமைச்சர் சந்தோஷின் குடும்ப உறுப்பினர்கள் 20 பேருடன் மதிய உணவை அருந்தினார் மேலும் அவர்களுக்கு நலம் விசாரித்தார்.

கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் மட்டும் அந்த குடும்பத்திற்கு எப்போதும் அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் இதர அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Similar News