யூடியூப் சேனல் மூலம் இலவசமாக பாடங்களை கற்பித்து வரும் பேராசிரியர் - குவியும் பாராட்டுக்கள்.!

யூடியூப் சேனல் மூலம் இலவசமாக பாடங்களை கற்பித்து வரும் பேராசிரியர் - குவியும் பாராட்டுக்கள்.!

Update: 2020-07-06 08:15 GMT

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசு கல்லூரி பேராசிரியர் யூடியூப் சேனல் மூலம் பாடங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருப்பவர் தீபா. இவர் அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல தலைப்பில் உள்ள பாடங்களை வீடியோவாக எடுத்து அவருடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்கிறார்.

இதனைப் பற்றி பேராசிரியர் தீபா கூறியது: என்னுடைய கல்லூரி மாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்தை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பி வந்தேன். அந்த வீடியோவை என்னுடைய மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு அனுப்பி உள்ளனர். இந்த வீடியோவால் பல மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இதனால் நான் யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் உயிரியல், தாவரவியல் மட்டுமல்லாமல் அனைத்து அறிவியல் பாடங்களை வீடியோவாக எடுத்து பதிவு செய்து வருகிறேன்.

மேலும், கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் நீட், சிஎஸ் ஐஆர் போன்ற தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இலவசமாக படங்களை வீடியோவாக எடுத்து பதிவு செய்து வருகிறேன். பணம் செலுத்தி பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு இலவசமாக பாடத்தை கற்று கொடுக்கும் நோக்கத்தில் இதை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Youtube Link: https://www.youtube.com/channel/UCXqGlEjNmKrTmWVqMIngbDA இல்லையென்றால் டாக்டர் டாக்டர் தீபா பார்த்தசாரதி என்கிற யூடியூப் சேனலில் பார்க்கலாம். 

Similar News