தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை தடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் - விவரங்களை அடுக்கும் மிஷன் காளி இயக்கம்.!
தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை தடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் - விவரங்களை அடுக்கும் மிஷன் காளி இயக்கம்.!
பள்ளர், தேவேந்திர குலத்தார் உட்பட பல உட்பிரிவுகளைக் கொண்ட ஜாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பட்டத்தைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்!
இது ஒரு மிகச்சிறந்த முடிவாகும். காரணம், பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் குணம் மற்றும் தொழிலின் அடிப்படையில் இருந்தது வர்ணம்.
ஆனால் வர்ணத்தை மீறி தர்மத்தில் தூண்டுகோல் இல்லாமல் உருவான ஒரு விஷயம் ஜாதி. காலப்போக்கில் அதில் ஏற்றத்தாழ்வுகளும் உருவாகிவிட்டது.
சாதி ஏற்றத்தாழ்வுகளை நிஜமான இந்துக்கள் என்றுமே எற்பது கிடையாது. அதனால் தாழ்த்தப்பட்ட மக்களையும் பிறகு இந்துக்களுக்கு சமமாக முன்னேற்ற வேண்டும் என்பதுதான் உண்மையான இந்துத்துவ சிந்தனையாக இருக்க முடியும். ஆனால் இந்த முயற்சிக்கு தற்போது பல ஜாதிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதை விட ஆச்சரியமான விஷயம்... இந்தப் பிரச்சினைக்கு பின்புலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளும் செயல்பட்டு வருகின்றனர். அந்த கிறிஸ்தவ மிஷினரிகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான வன்முறையை தூண்டும் விதமாக பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
வெள்ளாஞ் செட்டியார் என ஒரு சாதி, வெள்ளாளன் முதலியார் என ஒரு சாதி. இப்போ ஆபாசமா பேசி மாட்டிச்சே அந்தாள் வெள்ளால முதலி தான்.
பறையரிலே வெள்ளாள பறையர் என ஒரு சாதி உண்டு. இப்படி வெள்ளாளர் பட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் சாதிகள் தமிழ்நாட்டிலே மட்டும் நூற்றுக்கும் மேலே உண்டு. வலங்கை இடங்கை சண்டையிலே வலங்கையானா வெள்ளாளர் கூட நின்ன அனைத்து சாதிக்கும் வெள்ளாளன் பட்டம் கொடுக்கப்பட்டது.
தற்போது தேவேந்திரகுல சமூகத்தினர் வேளாளர் என்ற பட்டம் போட்டுக் கொள்ளக்கூடாது என்று குதிக்கும் ஜாதி சங்கங்கள், பொன்னர் சங்கர் கதை எழுதறேன்னு நம்ம குலசாமியை கேவலமா எழுதிய போதும், அதை படம் எடுத்தபோதும் ஏன் எதிர்க்கவில்லை? அட குலவிளக்கம்மன் கோவிலே ஈவேரா அண்ணாத்துரை தெரசா படம் இருக்கு! அதைக் கூட யாரும் எதிர்க்கவில்லை.