நவம்பரில் கட்சி தொடங்கிறார் ரஜினிகாந்த் : கராத்தே தியாகராஜன் தகவல்.!
நவம்பரில் கட்சி தொடங்கிறார் ரஜினிகாந்த் : கராத்தே தியாகராஜன் தகவல்.!
2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதை தொடர்ந்து முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய அவர் அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார். ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார் என்ற நிலையில் ரஜினி தலைமையில் கடந்த மார்ச் மாதம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இவர் கட்சி தொடங்குவது பற்றிய விவரம் குறித்து நவம்பரில் கட்சி தொடங்குவார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் கட்சி தொடங்கும் மாதம் ஆகஸ்ட்டுக்கு பதில் நவம்பருக்கு தள்ளிபோனதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.