புதுச்சேரி : ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர், அதிமுக, பாஜக ஆகிய எதிகட்சியினர் வெளி நடப்பு.!
புதுச்சேரி : ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர், அதிமுக, பாஜக ஆகிய எதிகட்சியினர் வெளி நடப்பு.!
பட்ஜெட்டிற்கு முழு வடிவம் பெறாமல் சட்டப்பேரவை ஏன் கூட்ட வேண்டும் என்று கேள்வி எழுகிறது, யுனியன் பிரதேச சட்டபடி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவை கூட்டினால் ஆளுநர் உரை அளிப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் துணைநிலை ஆளுநரின் கடிதத்தை மீறி முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அப்போது பேரவையில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் எப்படி தாக்கல் செய்ய முடியும் என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளி நடப்பு செய்து பட்ஜெட் உரையை ஒட்டுமொத்த எதிர் கட்சிகள் புறக்கணித்தனர்.
வெளி நடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, வழக்கமாக முதல் கூட்டத்தொடரில் கவர்னர் சட்டமன்றத்திற்கு வந்திருந்து உரை நிகழ்த்துவது மரபு, ஆனால் இன்று கவர்னர் உரை நிகழ்த்தவில்லை. நிதி நிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன், கவர்னர் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
அப்போதுதான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கவர்னர் அங்கீகாரம் இல்லாமல் நிதி நிலை அறிக்கையை வாசிப்பது குழப்பமான சூழலை உருவாக்கும். முதல்வர் கவர்னரை குறை கூறியே காலத்தை தள்ளி வருகிறார். எல்லா திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என தினமும் பாட்டு பாடுகிறார்.