விவசாயிகளுக்கான கிஸ்ஸான் ரயில் இன்று புறப்பாடு - மத்திய அமைச்சர்கள் கொடியசைத்து தொடக்கம்!

விவசாயிகளுக்கான கிஸ்ஸான் ரயில் இன்று புறப்பாடு - மத்திய அமைச்சர்கள் கொடியசைத்து தொடக்கம்!

Update: 2020-08-07 03:37 GMT

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு 2020 நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது விவசாயிகளின் நலனுக்காக வேளாண் பொருட்களை சந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில்,  விரைவில் கொண்டு செல்ல பிரத்யேகமாக கிஸ்ஸான் ரயில்கள் விடப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி விவசாயிகள் விளைவித்த அழுகும் தன்மையுடைய வேளாண் பொருட்கள்களான காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை உரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல பிரத்யேக கிசான் ரயில் ஆகஸ்ட்7-ம் தேி இன்று முதல் வாராந்திர முறையில் ரயில் இயக்கப்படுகிறது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ்கொயல் ஆகியோர் இன்று வீடியோ கான்பரன்ஸ் முறையில் கொடியசைத்து தொடக்கி வைக்கவுள்ளனர்.

பொது துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நடைமுறைபடுத்தப்படும் இந்த ரயில் மகாராஷ்டிராவின் தேவ்லாலி நகரிலிருந்து பிஹாரின் தனாபூருக்கு இன்று முதல் இயக்கப்படுகிறது. நாசிக் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து இந்த ரயிலில் பிஹாருக்கு கொண்டு செல்லப்படும்.

இந்த ரயில் மூலம் கொண்டு செல்லப்டும் பொருட்கள் பாட்னா, அலகாபாத், கட்னி, சத்னா உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த கிசான் ரயில் நாசிக் சாலை, மான்மாத், ஜால்கான், புசாவல், புர்ஹான்பூர், காந்த்வால, இடார்சி, ஜபால்பூர், கட்னி, மாணிக்பூர், பிரயாக்ராஜ், சேகோகி, தீனதயாள் உபாத்யாயா நகர், பக்ஸர் ஆகிய நகரங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பால், மீன் போன்ற பொருட்களையும் கொண்டு செல்லும் விதத்தில் இது விரிவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Similar News