"நான் ஒரு யோகி... அயோத்தி மசூதி பூமி பூஜையில் கலந்துக் கொள்ள மாட்டேன்..." - யோகி ஆதியநாத் அதிரடி!

I will not participate in foundation stone ceremony: CM Yogi Adithyanath

Update: 2020-08-06 08:50 GMT

அயோத்தியின் மசூதிக்கு அடிக்கல் நாட்ட தன்னை அழைக்க மாட்டார்கள் எனவும், அங்கு தான் செல்லவும் மாட்டேன் என்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்கு வந்தவரிடம் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இக்கருத்தை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ள உத்திர பிரதேச முதல்வர் யோகி வந்திருந்தார். விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது முதல்வர் யோகியிடம் ராமர் கோயிலை போல், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கட்டப்படவிருக்கும் புதிய மசூதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது "உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக மக்களுக்கு சேவை செய்வேன். அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் நான் கலந்துக் கொண்டேன், மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு என்னை யாரும் அழைக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும், நான் ஒரு யோகி, அதனால் நான் மசூதி அடிக்கல் நாட்டு விழாவிற்உ செல்ல மாட்டேன்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Similar News