ராஜிவ் காந்திதான் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் !! திக்விஜய சிங் உளறல் ..!

ராஜிவ் காந்திதான் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் !! திக்விஜய சிங் உளறல் ..!

Update: 2020-08-04 13:22 GMT

ராமர் கோவிலின் பூமி பூஜை ஆகஸ்ட் 5 நடக்கவுள்ள நிலையில்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங், முன்பே முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதாக கூறியுள்ளார்.

"முன்பே அடிக்கல் ராஜிவ் காந்தியால் நடப்பட்டது," என்று செய்தியாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.



"அயோத்தியில் ராமர் கோவில் வரவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விரும்பினார் என்னும் கமல் நாத் கூற்றுக்கு," திக்விஜய சிங் பதிலளித்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை வரவேற்பதாக சனிக்கிழமை கமல் நாத் கூறினார். தன்னுடைய கூற்று கட்சி வாக்கை அதிகரிக்கும் என்பதறிந்து, ராமர் கோவில் கட்டுவதை வரவேற்ப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சகத்தால் பகிரப்பட்டுள்ளது.

மேலும் ஒரு படிசென்று பூமி பூஜைக்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 4 போபாலில் தனது இல்லத்தில் " ஹனுமான் சாலிசா" மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அமைச்சகத்தால் நடத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது காங்கிரஸ் இந்த திடீர் நிலைமாற்றம் மிகப்பெரியதாக கருதப்படுகின்றது . இவர்களே முன்னதாக கடவுள் ராமர் இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து இவர்கள் வெளியிட்டுள்ளது, மூத்த தலைவர்கள் மற்றும் மக்கள் வரலாற்றை மறந்திருப்பார்கள் என்று கருதி கூறப்படுகின்றது.

செப்டெம்பர் 2007 காங்கிரஸ் மூத்த அமைச்சர்களால், கடவுள் ராமர் இருந்ததுக்கு ஆதரங்கள் எதுவும் இல்லை என்று கூறியது நினைவில் இருக்கும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் " வால்மீகி ராமாயணம் மற்றும் ராமச்சரிதமானஸ் " ஆகிய இரண்டும் வரலாற்று காப்பியங்களே, அதில் கூறப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டவை " என்று கூறப்பட்டிருந்தது.

2014 இல் பாபர் மசூதியை இடித்ததுக்கு, திக்விஜய சிங்க் கண்டித்துள்ளார். " இந்திய அரசியல் சட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது " என்று குறிப்பிட்டிருந்தார். பாபர் மசூதி இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டது என்பதை மறந்து அவர் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எதிராக பேசியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் கமல் நாத் மற்றும் திக்விஜய சிங் ஆகியோருக்கு ஒன்றை நினைவு படுத்தும் நேரம் இது, கபில் சிபல் சன்னி வக்ப் வாரியத்துக்கு சார்பாக ராமர் ஜனமபூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிராக போராடினர். இதுமட்டுமன்றி 2019 தேர்தலை முன்னிட்டு ராம் ஜென்மபூமி வழக்கை தள்ளிவைக்கவும் இவர் வலியுறுத்தினார். ராமர் கோவிலை கட்டுவதற்கு எதிராக காங்கிரஸ் மட்டுமல்ல அவர்களை சுற்றியுள்ளவர்களும் எதிர்த்தனர்.

எனவே ராமர் கோவில் கட்டுவது குறித்த லட்சக்கணக்கான இந்து மக்களின் கனவுகள் நிறைவேறி வருகின்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் புத்திசாலி தனமாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்.



source:  https://www.opindia.com/2020/08/ram-mandir-bhoomi-pujan-foundation-laid-rajiv-gandhi-digvijaya-singh/

Similar News