இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை; ஊரடங்கில் தளர்வுகள் கிடையாது - பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டம்.!

இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை; ஊரடங்கில் தளர்வுகள் கிடையாது - பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டம்.!

Update: 2020-08-01 05:50 GMT

இங்கிலாந்தில் உள்ள வடக்கு பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் கிடையாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் 3,03,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 46 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைப் பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியது: மக்கள் பெரும் அளவில் செல்கின்ற இடங்களான ககேசினோஸ், ஸ்கேட்டிங் ஆகிய விஷயத்துக்கு தடை நீடிக்க வேண்டும். ஊரடங்கு தளர்வுகளை சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்க முடியும். இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை இரண்டாவது அலை துவங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்புகளை இங்கிலாந்தில் அதிகரிப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.


இதன் பின்பு அந்நாட்டு சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் கூறியது: ஊரடங்கை மிகவும் கடுமையாக வேண்டும். மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வருகின்றனர். ஊரடங்கு நடிப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால், மக்களின் நலனுக்காக தான் இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசுகிறது என்பதை புள்ளிவிவர அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.   

Similar News