கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம் நியூ அப்டேட்.!

கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம் நியூ அப்டேட்.!

Update: 2020-07-31 06:28 GMT

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தின் முக்கிய அப்டேட்கள். தற்போது தமிழ் சினிமாவில் பெரிய பிரபலங்களின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. அந்த படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை காணுகிறது. சச்சின் டெண்டுல்கர்,மேரிகோம், டோனி ஆகியோரின் படங்கள் வெளியாகி நல்ல வசூலை பெற்றது.

அந்த வகையில் தற்போது இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை வரலாறு படம் முன்பதாக தமிழில் எடுக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி இருந்தது. முத்தையா முரளிதரன் ஆக நடிகர் "விஜய் சேதுபதி" நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட படம் உருவாக உள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த வாழ்க்கை வரலாறு படத்திற்கு "800" என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.கனிமொழி என்ற படத்தை இயக்கிய ஸ்ரீபதி ரங்கசாமி என்பவர் இப்படத்தையும் இயக்குகிறார்.

இந்த படத்தின் டைட்டில் 800 என்பதால் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளதால் படத்திற்கு 800 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இசை அமைக்க சாம் சிஎஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும் அதற்கு கம்போஸ் செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா என்ற படத்திற்கு இவர் இசையமைத்து இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

Similar News