தேச விரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பாயும்! ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அதிரடி!
தேச விரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பாயும்! ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அதிரடி!
ஜம்மு - காஷ்மீர் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை ஒரு குழுவை அமைத்து தேசிய விரோத நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் ஊழியர்களை அவர்களின் பணியிலிருந்து நீக்கம் செய்யப் பரிந்துரைத்தது என்று தி ட்ரிப்யூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அரசு அறிக்கையின்படி தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்களையும் இக்குழுவில் நிர்ணயித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையினரால் பரிந்துரைக்கப்படும் தேசவிரோத நடவடிக்கையில் பங்கெடுக்கும் ஊழியர்களின் வழக்குகளையும் இக்குழுவானது கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று அறிக்கை கூறுகிறது. தேசவிரோத செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 311 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குழுவின் பரிந்துரையின்படி வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தேசிய விரோத செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலி கணக்குகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துக்களை பரப்பும் பணியாளர்கள் மீதும், ஏற்கனவே தேசிய விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதியலாம் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது.
யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமான செயல்பாடுகளில் பஙகெடுக்கும் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அத்தகைய வழக்குகள் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் ஆராயப்பட்டு பொது நிர்வாகத் துறைக்கு பரிந்துரைக்கப்படும்.
மேலும் புலனாய்வு அறிக்கை மற்றும் பிற சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் தங்கள் வழக்கினை எடுத்துக் கொள்வர். பின்னர் அத்தகைய ஊழியர்கள் பணிபுரியும் துறை அவர்களை இடைநீக்கம் அல்லது பணிநீக்கம் செய்ய உத்தரவுகளை பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.