ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷுடன் ஜோடி சேரும் ஹன்சிகா மோத்வானி.!
ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷுடன் ஜோடி சேரும் ஹன்சிகா மோத்வானி.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் தனுஷ் இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பதாகவும் குட்டி படத்தின் இயக்குனர் மித்ரன் மற்றும் ஆர்.ஜவஹர் ஆகியோர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.இந்த படத்திற்கு இன்னும் பெயர் இடாமல் இந்த தகவலை படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'மாப்பிள்ளை' படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள்.
நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் எடுத்து முடித்துள்ள படம் ஜகமே தந்திரம்.இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்த படத்தை அடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் 'D43'மற்றும் 'D44' ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.அடுத்ததாக இந்தியில் 'அத்ராங்கி ரே'ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் இவர் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கருதப்படுகிறது.
ஆர்.ஜவஹர் இயக்குகிறார். இவர் தனுஷின் உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி,குட்டி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறோம் என ரசிகர்கள் தெரிவித்திருக்கின்றனர் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்களை பார்த்து பல வருடங்களாகிவிட்டன எனவும் விரைவில் காண வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.