கொரோனா வைரஸ் காரணத்தினால் அதிபர் தேர்தலை ஒத்தி வைக்கலாம் - டிரம்ப் பரிந்துரை.!

கொரோனா வைரஸ் காரணத்தினால் அதிபர் தேர்தலை ஒத்தி வைக்கலாம் - டிரம்ப் பரிந்துரை.!

Update: 2020-07-31 06:06 GMT

இந்த அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பதவியில் தொடர்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முழு நம்பிக்கையோடு தெரிவித்த தருணத்தில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகப் இருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

இதைப் பற்றி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியது: யுனிவர்சல் மெயில்-இன் மூலம் வாக்களிப்பது நடைபெற்றால் 2020 ஆம் ஆண்டு தேர்தல் மிக தவறான மற்றும் மோசடியான தேர்தலாக இருக்கும் என்றார்.

https://twitter.com/realDonaldTrump/status/1288818160389558273

இது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடமாக இருக்கும். மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும், வாக்களிக்கும் வரை தேர்தலை ஒத்தி வைக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.  

Similar News