மோசடி அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை அடக்கும் அருமையான சட்டம் - கூட்டுறவு வங்கி ஏன் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்கு சென்றது தெரியுமா?

மோசடி அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை அடக்கும் அருமையான சட்டம் - கூட்டுறவு வங்கி ஏன் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்கு சென்றது தெரியுமா?

Update: 2020-06-27 04:09 GMT

"ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்துள்ளது மிக நன்றே என்கிறார் எழுத்தாளர் சுபி.

கூட்டுறவு வங்கிகளை தங்கள் வீட்டு பீரோவைப் போல் பயன்படுத்தும், மோசடி அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை அடக்கும் அருமையான சட்டம் இது. வரவேற்க வேண்டிய சட்டம். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலைதரும் ஊழல்வாதிகளுக்கு சாட்டையடி.

சேலம் கூட்டுறவை கொள்ளையடித்த வீரபாண்டியார்கள், பணமதிப்பிழப்பு சமயத்தில் சேலம் கூட்டுறவு வங்கியில் 400 கோடி பணம் மாற்றியவர்களின் கொட்டம் குறையும். ரொம்ப காலம் முன்னாடியே எடுத்திருக்க வேண்டிய முடிவு.

தமிழ்நாடு மகாராஷ்டிரா மாநில அரசியல் 'வியாதி'களுக்கு ரொம்பவே வலிக்கும். கொரோனா மாதிரி இதுவும் ஒழிக்கப்பட வேண்டிய கிருமி. மஹாராஷ்டிராவில் சரத் பவார் கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கான பணத்தை கருப்பிலிருந்து வெள்ளையாக்க, டீமானிடைசேஷன் நேரத்தில் முயன்றார்.

அதிலும் பழைய ஆயிரம் ருபாய் நோட்டுகளை விவசாயிகளின் அக்கவுண்ட்டை உபயோகப்படுத்தி மாற்ற முயன்றார். இதையே எல்லா அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கூட்டுறவு வங்கி சார்க்கரை ஆலை ஊழல் ஊரறிந்தது.

ஒரு ஊரில் ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஆவது கட்சிக்காரர்கள் அல்லாத பொது மனிதர்கள் தலைவராக இருக்கிறார்களா?

யாரை வாழ்விக்க இவை தற்போது இருக்கின்றன. விவசாய கடன் என்பது கட்சியின் அரசியல் வாதிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் கொடுக்கப்பட்டு, திருப்பி வாங்குவது என்பது முடியாத காரியமாகி விடுகிறது.

கூட்டுறவு வங்கிககள் அரைசதவீதம் வட்டி அதிகம் கொடுப்பதால் விவசாயிகள் அந்த வங்கியிலேயே பணம் போடுகிறார்கள். ஆனால், கடன் என்னவோ அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு, பலம் பொருந்திய செல்வாக்கானவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதை கண்காணிக்கவே ரிசர்வ் வங்கி மேற்பார்வை நிச்சயம் அவசியம்.

இது சரியான முடிவே. இதை கேட்டு எந்த அரசியல்வாதிக்கு, மனிதர்களுக்கு வலிக்கிறதோ அவர் இதனால் பாதிக்கப்பட்டவர் என்பதே அர்த்தம். மக்களே இதை புரிந்து கொள்ளுவார்கள்.

கொள்ளை அடிப்பதை தடுத்தால் பலருக்கு கோபம் வராதா?

இனி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்று ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது. கூட்டுறவு வங்கிகளின் தில்லு முல்லுக்கள் ஏராளமானவை. ஆட்சி தொடக்கத்தில் சிலருக்கு மட்டும் கடனை தள்ளுபடி செய்துவிட்டு ஆட்சியின் முடிவில் பல விவசாயிகளை மேலும் கடனாளியாக்கி விடுவார்கள்.

விவசாயிகளுக்கு தேவை வேலையாட்கள்/நவீன இயந்திரங்கள், விளைந்த பயிருக்கு விலை உத்திரவாதம், இறக்குமதி கட்டுபாடுகள். ஒரே பயிர் பயிரிடுதல் தடுப்பு.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்ட ஈடு மற்றும் நவீன மயமாக்கப்பட்ட கட்டணம் குறைவானசேமிப்பு கிடங்குகள். இதுவே விவசாயம் உய்க்கும் வழி.

அதை விடுத்து கட்சிகள் கூட்டுறவு வங்கிகளை வைத்து ஆடும் மாயஜாலத்தால் விவசாயிகள் ஒருக்காலமும் முன்னேற முடியாது.

பலருக்கு இனிமே கூட்டுறவு வங்கி கடன் மூலம் கட்சியினர் சம்பாதிக்க முடியாதே என்ற கவலை. தவிர தவறாக சம்பாதிக்கும் அனைத்து வழிகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

Similar News