இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரிப்பு! கடந்த 24 மணி நேரத்தில், 10,215 பேர் பூரண குணம்!

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரிப்பு! கடந்த 24 மணி நேரத்தில், 10,215 பேர் பூரண குணம்!

Update: 2020-06-16 13:49 GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 10,215 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,80,012 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் பாதி பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. தற்போது 1,53,178 கொரோனா நோயாளி்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், முன்னணியில் உள்ள மருத்துவப் பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கொரோனா தொடர்பாக எதிர்கொள்ளும் களங்கத்தை துடைப்பதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விரிவான கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனைக் கீழ்காணும் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் : https://www.mohfw.gov.in/pdf/GuidetoaddressstigmaassociatedwithCOVID19.pdf

Similar News