உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனோ இறப்பு விகிதம் குறைவு - மத்திய அரசு புள்ளி விவரம் #Covid19 #modigovt
உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனோ இறப்பு விகிதம் குறைவு - மத்திய அரசு புள்ளி விவரம் #Covid19 #modigovt
இந்தியாவில், 1 லட்சம் மக்கள்தொகைக்கு ஒருவர் வீதம் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக மத்திய அரசு கூறி யுள்ளது. இது, உலக அளவில் மிகக்குறைவு என்றும் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டு இருப்பதாவது, உலக சுகாதார அமைப்பு, கடந்த 22-ந் தேதி ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் தான் மிகக் குறைவு என்று தெரிய வந்துள்ளது.
அந்த அறிக்கையில், உலக அளவில் கொரோனா உயிரிழப்பின் சராசரி அளவு, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 6.04 என்ற விகிதத் தில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொ கைக்கு ஒருவர் வீதம் தான் இறந்துள்ளனர். மற்ற நாடுகளை பொறுத்தவரை, இங்கிலாந்தில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 63.13 பேரும், ஸ்பெயின் நாட்டில் 60.60 பேரும், இத்தாலியில் 57.19 பேரும், அமெரிக்காவில் 36,30 பேரும், ஜெர் மனியில் 27.32 பேரும், பிரேசில் நாட்டில் 23.68 பேரும், ரஷ்யாவில் 5.62 சதவீதம் பேரும் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு, உரிய நேரத்தில் தொற்றுகளை கண்டறிதல், அவர்களின் தொடர்புகளை கண்டறிதல், திறமையான சிகிச்சை முறை ஆகியவையே காரணம் ஆகும். குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்பொது, இது 56.38 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.