இந்திய வீரர்களின் வீரமரணத்தை கேலி செய்த CSK அணியின் மருத்துவர் Dr. மது தொட்டப்பிலில் பணி நீக்கம் - CSK அதிரடி.!

இந்திய வீரர்களின் வீரமரணத்தை கேலி செய்த CSK அணியின் மருத்துவர் Dr. மது தொட்டப்பிலில் பணி நீக்கம் - CSK அதிரடி.!

Update: 2020-06-17 06:52 GMT

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேற்று லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததாக இந்திய ராணுவம் நேற்று அறிவித்தது. 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய மற்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில்  சிலர் மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் உள்ள வெறுப்பு நம் நாட்டின் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் கொண்ட வெறுப்பாக சில வருடங்களாக மாறி நிற்கிறது. வீர மரணம் அடைந்த நமது வீரர்களைக் கூட கேலி செய்யும் அளவுக்கு காழ்புணர்ச்சியின் உச்சத்திற்கு சிலர் செல்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் Dr. மது தொட்டப்பிலில் நமது வீரர்களின் சவப்பெட்டிகள் 'PMcares' ஸ்டிக்கர் ஒட்டி வருமா? என்ற கீழ்த்தரமான கருத்தை ட்வீட்டரில் பதிவிட்டார். 



இதற்கு பலத்த கண்டங்கள் எழுந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவர் கூறியது அணிக்குத் தெரியாது என்றும், உடனடியாக அவர் அணியின் மருத்துவர் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவித்தது.  



Similar News