"மெட்ரோ நிலையத்திற்கு ஏன் கலைஞர் பெயரை வைக்கவில்லை?" அடம்பிடிக்கும் தயாநிதி மாறன் #Dayanithimaran #ChennaiMetro #Kalaigar
"மெட்ரோ நிலையத்திற்கு ஏன் கலைஞர் பெயரை வைக்கவில்லை?" அடம்பிடிக்கும் தயாநிதி மாறன் #Dayanithimaran #ChennaiMetro #Kalaigar
அரசு எதைச்செய்தாலும் தி.மு.க அதனை விமர்சனம் செய்ய காத்திருக்கிறதே தவிர மற்ற விஷயங்களில் அதுவும் இந்த கொரோனோ காலகட்டத்தில் மக்களுக்கான நினைப்பேதும் இல்லை என்பது போல் தான் தெரிகிறது. அந்த வகையில் இன்று தமிழக அரசு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அறிஞர் அண்ணா,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயர்களை சூட்ட உத்தரவிட்டது. உடனே தி.மு.க'வின் தயாநிதி மாறன் கொதித்தெழுந்து ஏன் கருணாநிதி பெயரை சூட்டவில்லை என அடம்பிடிக்கும் விதமாக கொந்தளித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விர் பக்கத்தில் கண்டன பதிவும் பதிவேற்றி உள்ளார்.
இது பற்றி மூத்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கேட்ட பொழுது "முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது உயிரிழந்தவர்களுக்கு தரும் மரியாதை அது, ஆனால் கருணாநிதி அவர்கள் இறந்தபொழுது அவர் முதலமைச்சர் கிடையாது,மேலும் பதவியில் இல்லாமல் இறந்த அவருக்கு மெரினா'வில் இடம் கொடுத்ததே தமிழக அரசினெ பெருந்தன்மை எனவே இதை பெரிதுபடுத்துவது கீழ்த்தரமான செயல்" என்றார்