உ.பி : ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு தீபங்களால் ஒளிரப்போகும் அயோத்தி நகரம்.!

ஆகஸ்ட் 3 முதல் 5 வரை லட்சக்கணக்கான தீபங்கள் மூலம் முழு அயோத்தி நகரமும் ஒளிரும்.

Update: 2020-07-26 12:40 GMT

இந்த வருடம் வழக்கமான தீபாவளிக்கு முன்பே இன்னொரு தீபாவளி வருகிறது. அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோயிலுக்கு 'பூமி பூஜை' நடக்க இருப்பதைக் கொண்டாடும் விதமாக ,ஆகஸ்ட் 3 முதல் 5 வரை லட்சக்கணக்கான தீபங்கள் மூலம் முழு அயோத்தி நகரமும் ஒளிரும்.

ஆகஸ்ட் 5 ம் தேதி 'பூமி பூஜை'க்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை (ஜூலை 25) அயோத்திக்கு விஜயம் செய்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "இந்த நல்ல நேரத்தை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சென்று சேர்த்து, அயோத்தியை பெருமைப்படுத்த வேண்டும். ஆகஸ்ட் 3, 4 மற்றும் 5 இரவுகளில் ஒவ்வொரு வீடு மற்றும் கோவிலிலும் 'தீபொத்ஸவ்' இருக்கும். தூய்மை என்பது முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும், சுய ஒழுக்கத்தின் மூலம் அயோத்தி ஒரு முன்மாதிரியாக விளங்க இது ஒரு வாய்ப்பாகும். " என்று தெரிவித்தார்.

"மூன்று நாள் 'தீபொத்ஸவ்' யோசனை முதலமைச்சரால் வழங்கப்பட்டது, இப்போது மூன்று நாள் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய அனைவரும் புறப்படுகிறோம். ஒவ்வொரு நபரும் அவரது வீட்டில் தீபம் ஏற்றி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்வோம்.," என்று மாவட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அயோத்தியாவைச் சேர்ந்த பாஜக MLA, வேத் பிரகாஷ் குப்தா, "தீபாவளி மூன்று நாட்கள் அயோத்தியில் கொண்டாடப்பட்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி பூமி பூஜையில் முடிவடையும். இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் நகரம் மணமகள் போல அலங்கரிக்கப்படும். குறைந்தது 11,000 தீபங்கள் சரியுவின் நதிக்கரையில் ஏற்றப்படும். ஒவ்வொரு வீடும் கோயிலும் ஒளிரும்" என்றார்.

2017 ஆம் ஆண்டில் யோகி ஆதித்யநாத்தால் சாரியு ஆற்றின் கரையில் 1.7 லட்சம் தீபங்கள் ஏற்றி வைத்து 'தீபோட்ஸாவ்' தொடங்கப்பட்டது.

அப்போதிருந்து, ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு பெரிதாகிவிட்டது, மேலும் 2019 ஆம் ஆண்டில், 'தீபோத்ஸவ்' நிகழ்ச்சியின் போது அயோத்தியில் 5.5 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு அரசு சாதனை படைத்தது.

திகம்பர் அகாராவின் மஹந்த் சுரேஷ் தாஸும் இதேபோன்ற உணர்வை எதிரொலித்து, "500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோயில் கட்டப்படப் போகிறது, ஒவ்வொரு வீடும் தீபங்களை ஒளிரச் செய்ய வேண்டும்" என்றார்.

Similar News