கொரோனாவிடமிருந்து டெல்லியைக் காப்பாற்றாமல் கைவிட்ட கெஜ்ரிவால்? பொறுப்பைக் கையிலெடுக்கும் அமித் ஷா.! #Delhi #AmitShah

கொரோனாவிடமிருந்து டெல்லியைக் காப்பாற்றாமல் கைவிட்ட கெஜ்ரிவால்? பொறுப்பைக் கையிலெடுக்கும் அமித் ஷா.! #Delhi #AmitShah

Update: 2020-06-14 10:51 GMT

ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் இருக்கும் டெல்லி, கொரானா வைரஸின் இந்திய மையமாக உருவெடுத்து வருகிறது. 39,958 நோய்த்தொற்றுகளுடன் பல மாநிலங்களை விட அதிகத் தொற்றுகளுடன் உள்ளது. (மகாராஷ்டிரா, தமிழ்நாட்டைத் தவிர) தொடர்ந்து இரண்டு நாட்களாக 2000க்கும் மேற்பட்ட தொற்றுகள் தினமும் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அமித்ஷா பொறுப்பை கையிலெடுத்துக் கொண்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிக நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது என உள்துறை அமைச்சர் புரிந்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று, மத்திய சுகாதார அமைச்சர், Dr. ஹர்ஷ வர்தன், டெல்லி மேயர்களுடன் (MCDs) ஒரு கூட்டத்தை நடத்தினார். 



டெல்லியில் தொற்றுகள் அதிகரிக்கும் வேகத்திற்கு, இன்னும் சில நாட்களில் மும்பையை மிஞ்சினாலும் மிஞ்சி விடும். உச்ச நீதிமன்றம் கூட, சமீபத்த்தில் இதற்காக கெஜ்ரிவால் அரசை விளாசித் தள்ளியது. இறந்த சடலங்களைக் கூட சரியாக நிர்வகிக்கவில்லையென்றும், நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை மிருகங்களுக்கு கொடுக்கப்படுவதை விட மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியது. மூன்று நீதிபதிகள் கொண்ட குழு மேலும், டெல்லியில் நிலைமை கேவலமாகவும், கொடூரமாகவும் உள்ளதாகக் கூறினர். தினமும் 7000 சோதனைகளை மேற்கொண்டு வந்த டெல்லி அரசு, எதற்காக 5000 ஆகக் குறைத்தது எனவும் கேள்வி எழுப்பினர்.

இதை சமாளிக்க கெஜ்ரிவால் அரசாங்கம் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்காமல், டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்பன போன்ற சர்ச்சைக்குரிய முடிவுகளையே எடுத்தார். இருக்கிற தொற்று நோய் பரவல் பிரச்சினை போதாதென்று வெளிமாநில மக்களிடையேயும் டெல்லி மக்களுக்கும் இடையே பிரச்சினையை உண்டாக்க பார்த்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அந்த முடிவு இரண்டு நாட்களில் கவர்னரால் மாற்றியமைக்கப்பட்டது

சமீபத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா "டெல்லியில் ஜூன் 15-ல் 44 ஆயிரம் தொற்றுகளும் 6,500 படுக்கை வசதிகளும் தேவைப்படும் என்றும் ஜூன் 30-க்குள் 15,000 படுக்கைகள் தேவைப்படும் என்றும் ஜூலை 15ம் தேதிக்குள் 2.25 லட்சம் தொற்றுகளும் 33,000 படுக்கை வசதியும் தேவைப்படும் என்றும் ஜூலை 31க்குள் 5.5 லட்சம் தொற்றுகளும் 80,000 படுக்கை வசதிகளும் தேவைப்படும்" என்று அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்

ஆனால் இதைக் குறித்து கவர்னரை பற்றி குறை சொல்வதை தவிர வேறு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.இதை உணர்ந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தான் பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News