மும்பை தாராவியை காப்பாற்றும் ஆர்.எஸ்.எஸ் - 8 இலட்சம் மக்களின் உயிராபத்து நீங்கியது: கடந்த 7 நாட்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை!

மும்பை தாராவியை காப்பாற்றும் ஆர்.எஸ்.எஸ் - 8 இலட்சம் மக்களின் உயிராபத்து நீங்கியது: கடந்த 7 நாட்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை!

Update: 2020-06-10 04:39 GMT

கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டான தாராவியில் இந்த மாதம் இதுவரையில் ஆட்கொல்லி நோய்க்கு ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்ட முயற்சி பிரம்மிக்க வைக்கிறது.

நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பை மும்பை நகரம் சந்தித்து வரும் நிலையில், நகரின் இதய பகுதியில் இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. ஏப்ரல் 1 ஆம் தேதி இங்கு முதல் நோயாளி கண்டறியப்பட்டார்.

கடந்த மாதம் (மே) தொடக்கத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. அந்த மாதத்தில் மட்டும் தாராவியில் சுமார் 1,400 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக இங்கு வசித்து வந்த தமிழர்கள், வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் சொந்த ஊர் திரும்பினர்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக தாராவியில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் முறையே 17, 10, 13 பேர் மட்டுமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தாராவியில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை இங்கு 1,924 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 71 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த மாதம் இதுவரையில் ஆட்கொல்லி நோய்க்கு தாராவியில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.

இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன், அப்பகுதி மக்கள் சேர்ந்து கொடுத்த ஒத்துழைப்பும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி அழைப்பின்பேரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமும் இன்னும் சில தன்னார்வ அமைப்புகளும் அழைக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெருத்தெருவாக வீடு வீடாக தெர்மல் ஸ்கிரீனிங் முறையில் நோயறி இயக்கம் நடத்தப்பட்டது . இந்த நோயறி இயக்கத்தின் மூலம் சுமார் 10800 பேர் ஸ்கிரீனிங் செய்யப்பட்டனர். 200 பேர் கொண்ட இந்த குழுவில் மகளிர் பெரிய எண்ணிக்கையில் பங்கு கொண்டது ஒரு சிறப்பு அம்சமாகும்.

ஒருவர் டாக்டர்; மூவர் தன்னார்வலர்கள் கொண்ட 50 அணிகள் தயாராயின. முதலில் மூன்று நாளைக்கு இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டார்கள். அதன் பிறகு இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முழு உடல் கவச உடையும் முக கவசமும் சானிடைசர்களும் வழங்கப்பட்டன. கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி என்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

ஸ்கிரீனிங் நடத்தும் பணிகளில் சேர மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நோயறி இயக்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முடிந்தது என்றால் காரணம் ஆர்எஸ்எஸ்ஸின் அழைப்பின் பேரில் ஊர்க்காரர்கள் மனமுவந்து ஒத்துழைத்தது தான்.

சுமார் 2½ சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தாராவியில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். மக்கள் அடர்த்தியாக வசித்து வருவதால், இங்கு கொரோனா பாதிப்பு காட்டுத்தீயாக பரவும் என்று அஞ்சப்பட்டநிலையில், தொற்று பரவல் குறைந்து இருப்பது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News