இந்து பண்டிகையை சீண்டிய தி.மு.க ஊடகம்! பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடலாமா.!

இந்து பண்டிகையை சீண்டிய தி.மு.க ஊடகம்! பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடலாமா.!

Update: 2019-10-23 07:24 GMT

இந்துக்கள் சார்ந்த பண்டிகைகளை தொடர்ந்து தமிழக ஊடகங்கள் விமரிசித்து வருகின்றது. தீபாவளி வட நாட்டு பண்டிகையா என் கேட்டு விவாதமே தமிழக ஊடகங்கள் நடத்தியது. அதேபோல் கலைஞர் தொலைக்காட்சியில் இந்துக்கள் பண்டிகையின் போது விடுமுறை தின நிகழ்ச்சி என ஒளிபரப்புவார்கள் அவர்களால் வேறு மத பண்டிகைகளை பற்றி கேட்க முடிவதில்லை. பொங்கல் தமிழர் பண்டிகை தான் அதை இந்துக்கள் தான் கொண்டாடுகிறார்கள் மற்ற மதத்தினர் கொண்டாடுவதில்லை அதை பற்றி யாரும் பேசுவதில்லை.


இந்நிலையில் சன் மியூசிக் ட்விட்டரில் ஒரு போஸ்டர் பதிவிட்டுளளது அதில் பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாண்டலமா என்ற தொனியில் கேட்டுள்ளது பாட்டாசா அல்லது பாடல்களா என்பது போல் அந்த போஸ்டர் அமைந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன, குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகிறது. தீபாவளி தான் அவர்களின் ஒரு வருட வாழ்க்கைக்கு வருமானம் ஏற்படுத்தி தரும். இவ்வாறு இருக்க சன் மியூசிக் சேனல் இவ்வாறு பதிவிட்டிருப்பது அவர்கள் டிவியின் TRP ரேட் அதிகம் வாங்கி அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் தமிழர்கள் எக்கேடு கேட்டு போனால் என்ன என்பது போல் இருக்கிறது இதற்கு ட்விட்டர் வாசிகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.




https://twitter.com/SuryahSG/status/1186897508775055360




https://twitter.com/maithriim/status/1186877096292831232

Similar News