"ஒன்றிணைவோம் வா" இது கொடுமுடி திமுக இளைஞரணி ஸ்பெஷல் #Dmk #covid19
"ஒன்றிணைவோம் வா" இது கொடுமுடி திமுக இளைஞரணி ஸ்பெஷல் #Dmk #covid19
கொரோனோ ஊரடங்கு விதிகளையும் மீறி இரவில் பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொடுமுடி சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜா கமல் அசேன், இவர் கொடுமுடி திமுக இளைஞரணி அமைப்பாளர். இவர் தனது பிறந்தநாளை 20க்கும் மேற்பட்ட நபர்களுடன் பேருந்து நிலையம் எதிரில் இரவில் ஆபாச வார்த்தைகளுடன் கூச்சலிட்டு அலப்பறை செய்து கொண்டாடினார்.
இதனால் வெறுப்படைந்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் செய்தனர் இதனை தொடர்ந்து திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜா கமல் ஆசேன் மற்றும் அராபத், சதாம், மற்றொரு அராபத், ஹர்ஷத், அருண்பாபு ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊரே தனித்து இருக்க நினைக்கும் போது கொடுமுடி திமுக'வின் இந்த அராஜகம் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.