தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்! முதல்வர் பதவிக்கு தகுதியற்றவரா? - நெட்டிசன்கள் கேள்வி!

தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்! முதல்வர் பதவிக்கு தகுதியற்றவரா? - நெட்டிசன்கள் கேள்வி!

Update: 2019-08-15 09:49 GMT

நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திரதின விழா, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.


உரையின்போது நரேந்திர மோடி, “நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்காகவும் நதிகள், குளங்களை தூர் வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் என்ற மகான்தான் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி யாரும் சிந்திக்காத காலத்தில் சிந்தித்தார். நீரின்றி அமையாது உலகு” என்று கூறினார்” என்று கூறினார்.


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.


சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.


சென்னை தியாகராயநகரில் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.


சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.


இதேபோல பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.


ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்துள்ளார். இந்த முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதை புறக்கணித்தே வந்துள்ளார். ஆனால் தி.மு.க அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். இருப்பினும், மற்ற நிகழ்வுகளுக்கு தவறாமல் வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவது முக்கியமான நிகழ்வாக தெரியாமல் இருப்பது வியப்பளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


“சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாடுவதுதான் பெரியாரின் கொள்ளை. அதைத்தான் தலைவர் கலைஞர் கடைபிடித்து வந்தார். இப்போது தளபதியும் அதைத்தான் பின்பற்றி வருகிறார்.” என்கின்றனர் உடன்பிறப்புகள்.


தேசிய கொடி ஏற்றாமல் ஸ்டாலின் புறக்கணித்துள்ளது தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் #AntiNationalDMK என்ற கேஸ்டாக்குடன் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்த ஸ்டாலினையும், தி.மு.கவையும் நாமும் புறக்கணிப்போம்” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


நமது தேசத்தின் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றை கொண்டாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஸ்டாலினுக்கு முதல்வராவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று சமூக வலைதளத்தில் கேள்வி கேட்கின்றனர் நெட்டிசன்கள்.

Similar News